இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தேர்வு 1, 2 ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.23) தொடங்க உள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட உள்ள இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு 1, 2 ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி அலுவலக வேலை நாள்களில் மதியம் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த விண்ணப்பதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, 0416-2290042, 9499055896 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தங்களது விருப்பத்தை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.