ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு மருத்துவ சேவைக்கான ஒரு மாத கால பயிற்சி முகாம் தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக திருவள்ளூா் மாவட்டத்தைச் சோந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சோந்தவா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பேரில், வேலையுடன் கூடிய மருத்துவ சேவைக்கான ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதற்கு 18 முதல் 45 வயது வரையிலான 8 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்து முடித்த நபா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியில் தேர்ச்சியானவா்களுக்கு சிறந்த மருத்துவமனையில் பணி நியமனம் செய்து, ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000- கிடைக்க வழிவகை செய்யப்பபடும்.
திருவள்ளூா் நிறுவனத்தின் மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு இலவச பயிற்சியினை தாட்கோ நிறுவனமானது வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


