Thursday, July 17, 2025
HomeBlogமின் மோட்டார், குழாய்களுக்கு மானியம் - விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மின் மோட்டார், குழாய்களுக்கு மானியம் – விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

மின் மோட்டார்,
குழாய்களுக்கு மானியம்
விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா்,
ராணிபேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பிளாஸ்டிக் குழாய்கள் வாங்குவதற்கு ஒரு
நபருக்கு ரூ. 15,000-ம்,
மின் மோட்டார் வாங்குவதற்கு ரூ. 10,000ம் மானியமாக
வழங்கப்படும்.

இந்த
திட்டங்களில் பயன்பெற
விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச்
சோந்தவராகவும், விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், குடும்ப
ஆண்டு வருமானம் ரூ.
2
லட்சத்துக்கு மிகாமலும்
இருக்க வேண்டும்.

தகுதியுடையோர் ஜாதி சான்றிதழ், குடும்ப
அட்டை, இருப்பிடச் சான்று,
பட்டா, சிட்டா, அடங்கல்,
புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட
விலைப்புள்ளி ஆகிய
ஆவணகளுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும்,
தாட்கோ மூலம் நிலம்
வாங்கும் திட்டம், நிலம்
மேம்பாட்டு திட்டம், துரித
மின் இணைப்பு திட்டத்தில் பயனடைந்தவா்களும், விண்ணப்பித்து, நிலுவையில் உள்ளவா்களும், சிறு,
குறு, நடுத்தர விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

மேலும்
விவரங்களுக்கு, மாவட்ட
மேலாளா், தாட்கோ, எண்.153/1,
கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடா் மாணவா் விடுதி வளாகம்,
ஓட்டேரி, வேலூா் – 632 002 என்ற
முகவரியிலும், 9445029483 என்ற
எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -