ஸ்டார்ட்அப் புதிய
தொழில்நுட்பங்களுக்கு நிதியுதவி
இந்தியாவில் தற்போது கொரோனா 2ம்
அலை வீசி வருகின்றது. இதனை தடுப்பதற்கு மத்திய
அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில்
ஒரு பகுதியாக NIDHI4COVID2.0 என்ற
புதிய முயற்சியின் கீழ்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொரோனாவிற்கு எதிரான
புதுமையான தயாரிப்புகள் மற்றும்
மருத்துவ பாகங்கள் ஆகியவற்றை
தயாரிக்கலாம் என்றும்
அதற்கு நிதி உதவி
மத்திய அரசு சார்பில்
வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
இந்தியாவில் நிலவும் கடுமையான
சூழலை கருத்தில் கொண்டு
கொரோனா பரவலை எதிர்கொள்ள உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிப்பதற்காகவும் மத்திய அறிவியல்
மற்றும் தொழில்நுட்பத் துறையின்,
தேசிய அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் (என்எஸ்டிஇடிபி) ஆகியவை
கூட்டு அமைத்து இந்த
முயற்சியினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய
நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
இதன்
மூலமாக நாட்டில் கொரோனாவிற்கு எதிரான புதிய கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.