Saturday, January 25, 2025
HomeBlogஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்
- Advertisment -

ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

Start of application registration for Teacher Qualification Examination

ஆசிரியா் தகுதித்
தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு
தொடக்கம்

ஆசிரியா்
தகுதித் தேர்வுக்கான (TET)
விண்ணப்பப் பதிவு இணைய
வழியில் திங்கள்கிழமை (07.03.2022) முதல்
தொடங்கியுள்ளது.

கட்டாய
கல்வி உரிமை சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள் மற்றும்
அரசு உதவி பெறும்
பள்ளிகளில் ஆசிரியா் பணியில்
சேருவதற்கு, TET
எனப்படும் ஆசிரியா் தகுதி
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற வேண்டும். ஒன்று
முதல் ஐந்தாம் வகுப்பு
வரை பணியாற்ற, தகுதித்
தேர்வில் முதல் தாளிலும்,
எட்டாம் வகுப்பு வரை
பணியாற்ற தகுதித் தேர்வின்
இரண்டாம் தாளிலும், தேர்ச்சி
பெற வேண்டும்.

அந்த
வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை இரவு முதல் இணைய
வழியில் தொடங்கியுள்ளது. தகுதியுடையவா்கள் www.trb.tn.nic.in
என்ற ஆசிரியா் வாரிய
இணையதள முகவரியில் வரும்
ஏப்.13ம் தேதி
மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்கலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 14ம் தேதி
முதல் இணையவழியில் சமா்ப்பிக்கலாம்.

தகுதித்
தேர்வுக்கான இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோர் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆசிரியா் தகுதித் தேர்வுகள்
நடைபெறும் தேதிகள் பின்னா்
அறிவிக்கப்படும். தேர்வுகள்
150
மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என ஆசிரியா் தேர்வு
வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -