கல்வி நிறுவன
கட்டடங்களுக்கான வரன்முறை
– விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் உரிய அனுமதி பெறாமல்
கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் பல உள்ளன. கல்வி
நிறுவனங்களில் உள்ள
இந்த விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அந்தந்த
நிறுவனங்களுக்கு 2018ஆம்
ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் எழுந்த
தடையால் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியாமல் போனது. தற்போது
தடை நீக்கப்பட்டுள்ளதால், இந்த
விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை
பணிகள் மீண்டுமாக துவங்கியுள்ளன.
இந்நிலையில் விண்ணப்பிக்க தவறிய
கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும்
ஒரு வாய்ப்பாக சிறப்பு
அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மார்ச்
22 முதல் ஏப்ரல் 4 வரை
கல்வி நிறுவனங்களிலிருந்து இணையவழியாக விண்ணப்பங்களை பெற்றுக்
கொள்ளலாம் என முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இது
குறித்து நகர ஊரமைப்பு மற்றும் திட்டமிடுதல் இயக்கத்துறை அதிகாரிகள் கூறிய
போது:
கல்வி
நிறுவன கட்டட வரன்முறைக்கு இணையவழியாக விண்ணப்ப பதிவு
துவங்கியுள்ளது.
இதில்
சம்பந்தபட்ட கட்டடங்களின் தற்போதைய
தன்மை குறித்து பொறியாளர்,
கட்டட அமைப்பியல் வல்லுநர்,
வடிவமைப்பாளர் ஆகியோர்
பிரமாண பத்திரம் அளிக்க
வேண்டும். இவர்கள் கொடுத்த
ஆவணத்துடன் இருக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ளப்படும். ஏற்கனவே
விண்ணப்பித்தவர்களிடமும் கட்டடங்களின் தற்போதைய நிலை குறித்து
சான்று பெறப்படவுள்ளது. இது
குறித்த அறிவிப்புகளை அனைத்து
கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.