மதுரை, திருப்பரங்குன்றம் தியாகராஜல் பொறியற்கல்லூரி சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் ஆடு வளர்பபு பண்ணை அமைக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கான பல்கலைக்கழக சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் வரும் 27. செப்டம்பர் 2023 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட பயிற்சியின் முடிவில் ஆடு வளர்ப்பு மற்றும் அரசு சான்றிதழும் வழங்கப்படும். விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை 0453 – 2483903 தொடர்புகொள்ளலாம். தொடர்புக் கொள்ள வேண்டிய நாட்கள் திங்கள் முதல் வெள்ளி.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு மிக அவசியம்.