திருப்பூா் மாவட்டத்தில் உளள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில், தனியாா் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில் எழுதப் த் தெரிந்தவா்கள் முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, தையல் பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து விதமான கல்வித் தகுதி பெற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பஙகேற்கலாம். தனியாா் துறையில் வேலை பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இதுமுற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421–2999152, 94990–55944 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தில் வேலைதேடும் மாற்றுத் திறனாளிகள் தங்களது கல்விச் சான்று, சுயவிவரக் குறிப்புடன் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.