விவசாய மின்
இணைப்பில் பெயர் மாற்ற
சிறப்பு முகாம்
மதுரை
கிழக்கு, சமயநல்லுார், திருமங்கலம், உசிலம்பட்டி மின் கோட்டங்களில் விவசாய மின்இணைப்பிற்கு பதிவு
செய்துள்ள விவசாயிகள் பெயர்
மாற்றம், சர்வே எண்
உட்பிரிவு மாற்றம், சர்வே
எண் மாற்றம் செய்வதற்கான முகாம் ஜன., 7 காலை
10.30 முதல் மாலை 5.00 மணி
வரை அந்தந்த கோட்ட
அலுவலகங்களில் நடக்கிறது.
விண்ணப்பித்தவர் இறந்துவிட்டால் இறப்புச்
சான்று, வாரிசு சான்று,
மற்ற பங்குதாரர்களின் ஆட்சேபனையில்லா கடிதம், பெயர் மாற்றம்
கோரும் நபரின் வருவாய்
ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டு
வரவேண்டும்.நில கிரையம்,
தானம் பெற்ற காரணத்திற்காக பெயர் மாற்றம் செய்யவிரும்புவோர் அது தொடர்பான
பத்திரங்கள், மற்ற பங்குதாரர்களின் ஆட்சேபனையில்லா கடிதம்,
பெயர் மாற்றம் கோரும்
நபரின் வருவாய் ஆவணங்கள்
ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சர்வே
எண் உட்பிரிவு மாற்றத்திற்கு வரைபடம், வருவாய் அலுவலர்
சான்று, சர்வே எண்,
கிணறு இடமாற்றத்திற்கு பழைய,
புதிய இடத்திற்கான வருவாய்
ஆவணங்கள் கொண்டு வரவேண்டும்.