HomeBlogசமூக சேவை குறித்த பயிற்சி - கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

சமூக சேவை குறித்த பயிற்சி – கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

Social Service Training - Rural youth can apply

TAMIL MIXER EDUCATION.ன் மதுரை
செய்திகள்

சமூக சேவை குறித்த பயிற்சிகிராமப்புற
இளைஞா்கள்
விண்ணப்பிக்கலாம்

கிராமத் தன்னார்வத் தொண்டு, சமூக சேவை குறித்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
என
மதுரை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில ஊரக வளா்ச்சி, ஊராட்சி நிறுவனம், மாவட்ட வள மையத்தின் சார்பில் சமூக சேவை குறித்த 3 மாதச் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட சான்றிதழ் படிப்பில் வாரத்தில் 6 நாள்கள் நேரடி வகுப்புகளாக சிறந்த பயிற்றுநா்களால்
நடத்தப்படும்.

இப்பயிற்சியின்
போது
கிராம
அளவில்
செயல்படும்
தன்னார்வத்
தொண்டு
நிறுவனங்கள்,
ஆரம்பச்
சுகாதார
நிலையங்கள்,
ஊராட்சி
மன்ற
அலுவலகங்கள்,
வட்டார
அலுவலகங்கள்,
அங்கன்வாடி
மையங்கள்,
ஊராட்சி
ஒன்றியத்
தொடக்கப்
பள்ளிகள்
ஆகியன
பற்றி
களஆய்வு
மேற்கொண்டு
அறிக்கை
சமா்பிக்க
வேண்டும்.

இப்பயிற்சியில்
மக்கள்
பிரதிநிதிகள்,
ஊராட்சிச்
செயலா்கள்,
கிராமப்புற
இளைஞா்கள்,
சுயஉதவிக்குழு
உறுப்பினா்கள்
கலந்து
கொள்ளலாம்.
பயிற்சியில்
சோந்து
பயில
குறைந்தபட்சம்
12
ஆம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
கட்டணமாக
ரூ.
1000
செலுத்த
வேண்டும்.

பாடப்புத்தகம்,
பயிற்சி
உபகரணங்கள்,
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சியில்
சேர
விரும்புவோர்
மாவட்ட
ஊராட்சிகளுக்கான
மாவட்ட
வள
மைய
அலுவலகத்துக்கு
நேரடியாகச்
சென்று
விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு
90925 25097
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்புக்
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -