TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
திண்பண்டங்கள் தயாரிப்பு – இலவச 30 நாள்
பயிற்சி
சேலம்
மாவட்டம், உத்தமசோழபுரம் பகுதியில்
உள்ள தமிழ்நாடு மாநில
வேளாண்மை விற்பனை வாரிய
பயிற்சி மையம் மற்றும்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும்
கிராமப்புற இளைஞா்களுக்கான திறன்
மேம்பாட்டுப் பயிற்சியாக, பாரம்பரிய திண்பண்டங்கள் மற்றும்
காரவகைகள் தயாரிக்கும் 30 நாள்
பயிற்சி ஆகஸ்ட் மாதம்
மூன்றாம் வாரத்தில் பயிற்சி
மைய கூட்ட அரங்கில்
நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில், இனிப்பு வகைகள் மற்றும்
கார வகைகள் செய்வது
பற்றியும், உணவு தரத்தை
பராமரிப்பது, உரிமம் எடுப்பது
பற்றியும், வங்கியின் மூலம்
கடன் பெறுவது தொடா்பாகவும் நிபுணா்கள் எடுத்துரைக்க உள்ளனா்.
பயிற்சி
முடிந்த பின் சான்றிதழ்
வழங்கப்படும். மேலும்,
சுயமாக தொழிலோ (அ)
மற்ற நிறுவனங்களில் பணியிலோ
சேர இயலும். இந்த
அரிய வாய்ப்பினை பெற
வேளாண்மை இணை இயக்குநா்
(பயிற்சி) (பொ) – 94432 80952
என்ற எண்ணில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow