சிறுதானிய உணவு வகைகளை தயாரிக்கும் பயிற்சி குறித்து வேளாண் பல்கலை. தகவல் பயிற்சி மைய தலைவர்ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 7-ம் தேதி சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் பயிற்சியும், வரும் 8-ம் தேதி தேனி வளர்ப்பு தொடர்பான பயிற்சியும் செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்படுகிறது.
சிறுதானிய உணவு வகைகள் பயிற்சியில் தினை அரிசி கொழுக்கட்டை, பாயசம், வடை, ரிப்பன் பக்கோடா, தினை மாவு உருண்டைகள், சிறு தானிய அடை, சிறுதானிய பிசி பெலே பாத் மிக்ஸ், சிறுதானிய காராசேவ் மிக்ஸ், பேன்கேக், சாலட், சூப் ஆகியவற்றின் தயாரிப்பு முறை குறித்தும், தேனி வளர்ப்பு பயிற்சியில் தேனி வளர்ப்பு சாதனங்கள், பராமரிப்பு நுட்பங்கள், தேன் சார்ந்த பொருட்களை அறுவடை செய்தல், பதப்படுத்துதல் குறித்த செய்முறை விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
இவற்றை மகளிர், சுய உதவிக் குழுக்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் என அனைத்துதரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048, 044-29530049 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, தங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.