TAMIL MIXER
EDUCATION.ன்
தென்காசி செய்திகள்
திறன் பயிற்சித் திட்டங்கள்– கிராமப்புற இளைஞா்கள் சேரலாம்
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டம் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்களின்
வாழ்வாதாரத்தை
மேம்படுத்த
நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
இத்துடன், ஊரக இளைஞா்களுக்கு
திறன்
பயிற்சி
வழங்குவதற்கான
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ்
18 முதல்
32 வயதுக்கு
உள்பட்ட
கிராமப்புற
இளைஞா்களுக்கு
தொழில்
சார்ந்த
நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு
ஏற்படுத்தி
நிலையான
வருமானம்
ஈட்டும்
வகையில்
பயிற்சி
வழங்கப்படும்.
இதன்கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமானத் துறை, ஆட்டோமோட்டிவ்,
சில்லறை
வணிகம்,
தளவாடங்கள்,
அழகுக்
கலை,
தகவல்
தொழில்நுட்பம்,
சுற்றுலா,
விருந்தோம்பல்
போன்ற
எளிதில்
வேலைவாய்ப்பு
பெற
இயலும்
120க்கு
மேற்பட்ட
தொழில்
பிரிவுகளில்
பயிற்சி
வழங்கப்பட்டு
வேலைவாய்ப்பு
ஏற்படுத்தப்படுகிறது.
விருப்பமுள்ள
இளைஞா்கள்
ஒவ்வொரு
மாவட்டத்திலும்
உள்ள
‘மகளிர்
திட்டம்’
என
அழைக்கப்படும்
தமிழ்நாடு
மாநில
ஊரக
வாழ்வாதார
இயக்கத்தின்
அலுவலகத்தையோ,
ஒவ்வொரு
வட்டாரத்திலும்
செயல்படும்
வட்டார
இயக்க
மேலாண்மை
அலுவலகத்தையோ
அணுகி
விவரங்களைப்
பெற்று
பயிற்சியில்
சேரலாம்.
இதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ள
வாழ்வாதார
உதவி
அழைப்பு
எண்
155330ஐ
தொடா்பு
கொள்ளலாம்.
Vishal