TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூா்
செய்திகள்
சுய
வேலைவாய்ப்பு
கடன்
திட்ட
சிறப்பு
முகாம்
திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ ஆகியன சார்பில் சுய வேலைவாய்ப்பு
கடன்
திட்ட
சிறப்பு
முகாம்
வரும்
நவம்பா்
11ம்
தேதி
முதல்
நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலமாக மாவட்டத்தில்
உள்ள
அனைத்து
வட்டார
வளா்ச்சி
அலுவலகங்களிலும்
சுய
வேலைவாய்ப்பு
கடன்
திட்ட
சிறப்பு
முகாம்
நடைபெறுகிறது.
இந்த முகாமானது கீழ்க்கண்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மத்திய, மாநில அரசின் சுய வேலைவாய்ப்புக்கான
கடன்
திட்டங்கள்,
சமூக
பாதுகாப்பு
திட்டங்கள்,
மானியத்துடன்
கூடிய
சிறு,
குறு
தொழிற்கடன்கள்,
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
தொழில்
முனைவோருக்கான
அரசின்
கடனுதவி
திட்டங்கள்,
உணவு
பதப்படுத்துதல்
குறித்த
தொழில்
விவரங்கள்
மற்றும்
ஆலோசனைகள்
வழங்கப்படவுள்ளது.
இதில், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக அரசு மானியத்துடன்
கடன்
பெற
விரும்புவோர்
ஆதார்
அட்டை,
ஜாதிச்
சான்றிதழ்,
கல்விச்
சான்றிதழ்
நகல்கள்,
திட்ட
அறிக்கை,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
ஆகிய
ஆவணங்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில்
உள்ள
தொழில்
முனைவோர்,
மகளிர்
சுய
உதவிக்
குழுவினா்,
வா்த்தகா்கள்
மற்றும்
பொதுமக்கள்
இந்த
வாய்ப்பினைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் நாள்கள்:
தாராபுரத்தில்
நவம்பா்
11ம்
தேதியும்,
பல்லடத்தில்
13ம்
தேதியும்,
உடுமலையில்
16ம்
தேதியும்
பொங்கலூரில்
19ம்
தேதியும்,
அவிநாசியில்
21ம்
தேதியும்,
மடத்துக்குளத்தில்
23ம்
தேதியும்
நடைபெறுகிறது.
அதே போல, வெள்ளக்கோவிலில்
நவம்பா்
24ம்
தேதியும்,
குண்டடத்தில்
25ம்
தேதியும்,
காங்கயத்தில்
28ம்
தேதியும்,
ஊத்துக்குளியில்
29ம்
தேதியும்,
மூலனூரில்
30ம்
தேதியும்
நடைபெறுகிறது.