Home Blog SBI – 5,486 & SSC – 20,000 காலிப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

SBI – 5,486 & SSC – 20,000 காலிப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

1

SBI - 5,486 & SSC - 20,000 காலிப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

வங்கி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

வங்கி மற்றும் ஸ்டாப் செலக்சன் கமிஷனர் அறிவித்துள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த பட்டதாரி இளைஞர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

பாரத ஸ்டேட் வங்கியால் 5,486 சீனியர் அசோசியேட்ஸ் மற்றும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் ஆனால் 20,000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க உள்ள பட்டதாரிகளில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

SBI APPLYCLICK HERE

SSC APPLYCLICK HERE

மேற்குறிப்பிட்ட இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.

இந்த பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 11 முதல் மாலை 4 வரை 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 9499055893 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பயன்படலாம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version