Join Whatsapp Group

Join Telegram Group

சம்பா நெல் பயிர் காப்பீடு – விவசாயிகள் பயன்பெறலாம்

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்

சம்பா நெல் பயிர் காப்பீடுவிவசாயிகள்
பயன்பெறலாம்

நெல் பயிருக்கு காப்பீடு செய்து
விவசாயிகள்
பயன்பெறலாம்
என
ஈரோடு
வேளாண்மை
இணை
இயக்குநர்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

விவசாயிகளுக்கு
எதிர்பாராமல்
ஏற்படும்
இழப்புகளுக்கு
நிதியுதவி
வழங்கி
பாதுகாக்கவும்,
பண்ணை
வருவாயை
நிலைப்படுத்தவும்
மற்றும்
அதிநவீன
தொழில்
நுட்பங்களை
கடை
பிடிப்பதை
ஊக்குவிக்கவும்,
பிரதம
மந்திரியின்
திருந்திய
பயிர்
காப்பீட்டுத்
திட்டம்,
தமிழகத்தில்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில்
நடப்பு
சம்பா
பருவத்தில்
அக்ரிகல்சுரல்
இன்சூரன்ஸ்
கம்பெனி
ஆப்
இந்தியா
நிறுவனத்தின்
மூலம்
இத்திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.
அறிவிக்கை
செய்யப்பட்டுள்ள
பயிர்கள்
நடப்பு
சம்பா
பருவத்தில்
நெல்
பயிர்
பிர்க்கா
அளவில்
அறிவிக்கை
செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில்
மொத்தம்
28
பிர்காக்கள்
அறிவிக்கை
செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கை
செய்யப்பட்டுள்ள
பிர்காக்களின்
கீழ்
உள்ள
அனைத்து
வருவாய்
கிராமங்களைச்
சேர்ந்த
அனைத்து
விவசாயிகளும்
திட்டத்தில்
சேர்ந்து
பயன்பெறலாம்.
சம்பா
நெல்
பயிருக்கு
பிரீமியத்
தொகையாக
ஏக்கருக்கு
554.25
ரூபாய்
செலுத்த
வேண்டும்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள
பிர்காக்களைச்
சார்ந்த
கடன்
பெறும்
விவசாயிகள்,
தாங்கள்
பயிர்
கடன்
பெறும்
தொடக்க
வேளாண்மை
அல்லது
தேசியமயமாக்கப்பட்ட
வங்கிகள்
மூலமாக
தங்கள்
விருப்பத்தின்
பேரில்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள
பிர்காக்களைச்
சார்ந்த
கடன்
பெற
விவசாயிகள்,
நடப்பு
பசலி
ஆண்டுக்கான
அடங்கல்
அல்லது
பயிர்
சாகுபடி
சான்றை
கிராம
நிர்வாக
அலுவலரிடம்
பெற்று
அதனுடன்
வங்கி
கணக்கு
புத்தகத்தின்
முதல்
பக்க
நகல்,
ஆதார்
அட்டை
நகல்
மற்றும்
சிட்டா
ஆகியவற்றை
பொது
சேவை
மையங்கள்
அல்லது
தொடக்க
வேளாண்மை
கூட்டுறவு
கடன்
சங்கங்கள்
அல்லது
தேசியமயமாக்கப்பட்ட
வங்கிகள்
மூலமாக
பதிவு
செய்து
கொள்ளலாம்.

விண்ணப்பிக்க: வருகின்ற நவம்பர் 15ம் (15.11.2022) தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,
விண்ணப்பங்கள்
விடுபடாமல்
இருக்கவும்
பிரதம
மந்திரியின்
திருந்திய
பயிர்
காப்பீட்டுத்
திட்டத்தில்
குத்தகை
விவசாயிகள்
உள்பட
அனைத்து
விவசாயிகளும்
முன்
கூட்டியே
பதிவு
செய்து
தங்கள்
சம்பா
நெல்
பயிர்களுக்கு
ஏற்படும்
எதிர்பாராத
மகசூல்
இழப்புகளில்
இருந்து
பாதுகாத்து
பயனடையலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]