ஊரக திறனாய்வுத் தேர்வு – அவகாசம் நீட்டிப்பு
ஊரக
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக
திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வுத் தேர்வு
ஜன.30ம் தேதி
நடத்தப்படவிருந்தது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை
நீட்டிக்க பல்வேறு பள்ளிகளில் இருந்து தற்போது கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து தேர்வா்களின் நலன்கருதி
ஊரக திறனாய்வுத் தேர்வு
பிப்.20ம் தேதிக்கு
ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்தத்
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பள்ளித் தலைமை
ஆசிரியா்கள் மூலம் ஜன.12ம்
தேதிக்குள் பதிவு செய்ய
வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
மாணவா்கள்
சமா்ப்பித்த விண்ணப்பங்களை, தலைமை
ஆசிரியா்கள் ஜன.20-ஆம்
தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற
வேண்டும். இந்த த்
தகவலை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து, தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த
மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.