மீனவர்களுக்கு ரூ.5,500
தடைக்கால நிவாரண நிதி
– புதுச்சேரி முதல்வர்
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல்
பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும்
ஏப்ரல், மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலம்
என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே
இந்த 60 நாட்களில் மீனவர்கள்
மீன் பிடிக்க அரசு
தடை விதித்துள்ளது. இந்த
இனப்பெருக்கம் மூலம்
மீன்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே விசை படகுகள்
கடலுக்கு செல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது.இந்த
மீன்பிடி தொழிலை நம்பி
ஏராளமானோர் உள்ளனர். பலருக்கு
இது வாழ்வாதார தொழிலாக
உள்ளது. வருடம் தோறும்
கடலுக்கு சென்று விசை
படகுகள் மூலம் மீன்களை
பிடித்து அதை மொத்தமாகவும், சில்லறையாகவும் மீனவர்கள்
விற்கின்றனர். இந்த
ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடை காலம்
என்பதால் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். இதனால் அரசு
இவர்களுக்கு நிவாரண நிதிகளை
அளிக்கிறது.
புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி
தடைக்கால இந்த வருடத்திற்கான நிவாரண நிதியுதவியாக ரூ.5,500
வழங்கப்படும் என்று
முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மீனவர்களின் வங்கிக் கணக்கில்
நிவாரண நிதியுதவி இன்று
முதல் செலுத்தப்படும் என
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
அறிவித்துள்ளார்.