Join Whatsapp Group

Join Telegram Group

திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் நிதி உதவி – மத்திய அரசு அறிவிப்பு

By admin

Updated on:

திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய்
நிதி உதவிமத்திய
அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை
தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
இதன் காரணமாக பல
மாநிலங்களில் ஊரடங்கு
நடைமுறை விதிக்கப்பட்டுள்ளது. இந்த
பொது முடக்க காலத்தில்
மக்களுக்கு உதவியாக மாநிலங்கள் தோறும் பல சலுகைகள்
வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா
தொற்றுக்கு மத்தியில் ஊரடங்கால்
பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் நிதி
உதவி வழங்குவதாக மத்திய
அரசு அறிவித்துள்ளது.

நாடு
முழுவதும் உள்ள திருநங்கைகள் கொரோனா காரணமாக தங்களது
அன்றாட தேவைகளை கூட
நிறைவேற்றி கொள்ள முடியாத
சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி
நலிவடைந்துள்ள திருநங்கைளுக்கு உதவ வேண்டும் என
பல அமைப்புகளும், தன்னார்வலர்களும் மத்திய அரசுக்கு
கோரிக்கை வைத்துள்ளனர். இதை
தொடர்ந்து மத்திய சமூக
நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உதவியாக
1,500
ரூபாய் பிழைப்பூதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த
நிலையில் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை சற்று
கூடுதலாக வழங்க வேண்டும்
என கோரிக்கைகள் எழுந்து
வருவது குறிப்பிடத்தக்கது. மேலும்
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் அல்லது
அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாய
அமைப்புகள், அரசின் http://forms.gle/H3BcREPCy3nG6TpH7
என்ற இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம்.

அந்த
இணையதளத்தை திறக்கையில், ஒரு
விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஆதார்
எண், வங்கி கணக்கு
எண் போன்ற அடிப்படை
விவரங்களை பதிவு செய்து
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]