Home Blog சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு

0

Rs.5000 / - for hospitalization of road accident victims

சாலை விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000
பரிசு

சாலை
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான
நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து
உதவி புரியும் நபர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு
இந்திய அரசின் சாலைப்
போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பரிசு வழங்கும் திட்டம்
ஒன்றினை அறிவித்துள்ளது

பொன்னான
நேரத்தில் சாலை விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக
வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை
விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது
ஆகும். ஒரு ஆண்டில்
அதிகபட்சம் 5 முறை ஒரு
நபருக்கு பரிசுத் தொகை
வழங்கப்படும்.

சாலை
விபத்து நடந்த பின்
காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின்
தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல்
தெரிவிப்பர்.

அனைத்து
விபத்துக்களும் மாவட்ட
ஆட்சியரது தலைமையின் கீழ்
இயங்கும் மாவட்ட
அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில்
தெரிவு செய்யப்படும் நேர்வுகள்
ரூ.5000 பரிசு தொகை
வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை
செய்யப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version