பெற்றோரை இழந்த
குழந்தைகளுக்கு ரூ.3
லட்சம் நிவாரணம் – கேரள
முதல்வர்
கொரோனா
வைரஸ் தொற்று நாடு
முழுவதும் மின்னல் வேகத்தில்
வருகிறதது. இந்த உயிர்க்கொல்லி நோயால் தொடர்ந்து உயிரிப்புகள் அதிகமாக உள்ளது. அரசுகள்
பல்வேறு தடுப்பு பணிகளை
செய்து வருகிறது. தினந்தோறும் பாதிப்புகள் உயர்ந்து காணப்படுகிறது. அதிகரித்து வரும் வைரஸ்
பரவலால் பொது மக்கள்
அச்சத்தில் உள்ளனர். அரசு
ஊரடங்கை அறிவித்து வருகிறது.
இதன் மூலம் வைரஸ்
பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மறுபுறம்
இந்த ஊரடங்கால் மக்கள்
வேலையிழந்து சிரமப்படுகின்றனர். பரவி
வரும் தொற்றால் மக்கள்
தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் இழந்து
தவிக்கின்றனர். அரசுகள்
மக்களுக்கு இழப்பீடு மற்றும்
நிவாரண உதவிகளையும் தொடர்ந்து
வழங்கி வருகிறது. இந்த
கொரோனா வைரசால் நிறைய
குழந்தைகள் தங்கள் பெற்றோரை
இழந்து பாதுகாக்க ஆள்
இன்றி கஷ்டப்படுகிறார்கள்.
இந்த
குழந்தைகளை கருத்திற்கொண்டு கேரள
அரசு கொரோனாவால் பெற்றோரை
இழந்த குழந்தைகளுக்கு ரூ.3
லட்சம் உடனடி நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என
அறிவித்துள்ளது.
அவர்களின்
கல்வியை உறுதிப்படுத்தும் வகையாக
அவர்கள் பட்டம் பெறும்
வரை ஆகக்கூடிய அனைத்து
செலவுகளையும் அரசே
ஏற்கும். மேலும் பெற்றோரை
இழந்த குழந்தைகளின் 18 வயது
வரை மாத உதவித்தொகை வழங்கப்படும் என
கேரள முதல்வர் பிரனாயி
விஜயன் தெரிவித்துள்ளார்.