Join Whatsapp Group

Join Telegram Group

TANGEDCO ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

By admin

Updated on:

TANGEDCO ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக
உயர்வு

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது
58
ஆக இருந்தது. பிறகு
CORONA நோய் பரவல்
காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு
உத்தரவின் காரணமாக ஏற்பட்ட
பொருளாதார இழப்பை சரிசெய்ய
செலவினங்களை குறைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி ஓய்வூதிய
பலன்களை கருத்தில் கொண்டு
அரசு ஊழியர்கள் ஓய்வு
பெறும் வயது 59 ஆக
உயர்த்தப்பட்டது. இதற்கு
சில தரப்பினர் ஆதரவும்,
சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். சுமார் 25 ஆயிரம் அரசு
ஊழியர்களின் பணிக்காலம் மேலும்
1
ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டது.

பிறகு
மத்திய அரசு ஊழியர்களை
போல மாநில அரசு
ஊழியர்களுக்கும் ஓய்வு
வயதை 60 ஆக உயர்த்த
வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர். இது தொடர்பாக
உயர் அதிகாரிகள் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் கலந்தாலோசித்து தமிழ்நாடு
தலைமைச் செயலர் பிப்ரவரி
25
ம் தேதி அரசாணை
எண் 29 பிறப்பித்தார். அதன் படி அரசு
ஊழியர்களின் ஓய்வு பெறும்
வயதை 59 இல் இருந்து
60
ஆக அரசு உயர்த்தியது.

இதை
தொடர்ந்து அரசு பள்ளி
மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும்
பொதுபணித்துறை ஊழியர்கள்
ஆகியோரின் ஓய்வு பெறும்
வயது உயர்த்தப்பட்டது. இது
அனைத்து அரசு துறைகளும்
பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடைந்து
தற்போது தமிழ்நாடு மின்பகிர்மான துறை கழக ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக
உயர்த்தி அதற்கான அரசாணையை
வெளியிடப்பட்டுள்ளது.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]