தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மதம்,
சாதி, சமூகம் விவரங்கள்
தேவை இல்லை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை
சேர்க்கும் போது பொதுவாக
அவர்களின் பெயர் மற்றும்
குடும்ப விவரங்களை பெற்றோர்கள் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை
சேகரிக்கும் வழக்கம் ஆரம்ப
காலத்தில் இருந்து உள்ளது.
இந்நிலையில் பள்ளி மாற்றுச்
சான்றிதழில் இனி மாணவர்கள்
தங்கள் சாதியை குறிப்பிட
விரும்பவில்லை என்றால்
மதம் இல்லை என்று
குறிப்பிட அரசு அனுமதியளித்துள்ளது.
அரசின்
அந்த அறிவிப்பை தொடர்ந்து,
சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்களை
சேர்க்கும் போது கண்டிப்பாக பிறப்பு சான்றிதழில் பெயரை
பதிவு செய்திருக்க வேண்டும்
என்று அறிவித்தது. பள்ளியில்
மாணவர்களை சேர்க்கும் போது
தங்கள் மதம், சாதி,
சமூகம் பற்றிய விவரங்களை
இனி சமர்ப்பிக்க வேண்டியது
இல்லை என்று கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர்
அரசின் இந்த உத்தரவு
முறையாக பின்பற்றப்படவில்லை என்று
குற்றம் சாட்டியுள்ளார். பல
பள்ளிகள் இன்னும் சாதி,
மத விவரங்களை குறிப்பிடும் படி வலியுறுத்துவதாக கூறினார்.
நடப்பு
கல்வி ஆண்டில் இருந்து
நீதிமன்றத்தின் உத்தரவை
பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்துவதாக தமிழ்நாடு
அரசு ஆணை பிறப்பித்துள்ளது.