விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்.5-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா, இன்னோவல் மென்பொருள் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவை, அடையார் ஆனந்த பவன், ரிலையன்ஸ் ஜியோ, ராயல் என்பீல்டு, இதயம் நல்லெண்ணெய் உட்பட 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ / டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய நபர்களை வேலைக்குத் தேர்வு செய்ய உள்ளார்கள்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இம்முகாமில் கலந்துகொள்ள அனைத்து கல்விச் சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.