கோவையில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 5-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து வட்டாரங்களில் வசிப்போர் அதிகளவில் பங்கேற்கும் பொருட்டு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் சாலை, ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், வரும் 5ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
8-வது முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, ஐடிஐ பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஊரகம் மற்றும் நகர்புறம் 18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் தவறாது கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பயோ டேட்டா, புகைப்படம் மற்றும் இதர தகுதிச் சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெற்று பயன் பெறலாம். அனுமதி இலவசம்” என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.