விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குனர் பாலமுருகன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும், 3ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான மெகா வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.இதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., நரசிங், பார்மசி உள்ளிட்ட தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள், இம்முகாமில் பங்கேற்று பெறலாம்.இம்முகாமின் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள், தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விபர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

