தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அரசுப்பணியைப் பெற வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களது கனவாக உள்ளது.
இதற்காகப் பலரும் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து தொடர்ந்து படித்து வருகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பையும் பலரும் உற்றுநோக்கிக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்குத் தோராயமாக 3 மாதங்களிலிருந்து 6 மாத காலமேயாகும். ஆனால் கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சில காரணங்களால் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.