திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆா்.சுரேஷ் கூறியதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி.இ., எம்.பி.ஏ. மற்றும் அனுபவம் உள்ள ஓட்டுநா்கள், வெல்டா், எலக்ட்ரீஷியன், பிளம்பா் மற்றும் மெக்கானிக் உள்ளிட்டவா்களும் பங்கேற்கலாம்.
திருப்பூரில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இதில், பங்கேற்க விரும்புபவா்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421–2971152 அல்லது 94990–55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.