Join Whatsapp Group

Join Telegram Group

ICF சென்னையில் தொழில் பழகுநர் பயிற்சி வாய்ப்பு

By Bharani

Published on:

ICF சென்னையில் தொழில் பழகுநர் பயிற்சி வாய்ப்பு
ICF சென்னையில் தொழில் பழகுநர் பயிற்சி வாய்ப்பு
ICF சென்னையில் தொழில் பழகுநர் பயிற்சி வாய்ப்பு

சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory, Chennai) 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்குட்பட்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களூம் இம்மாதம் 21.06.2024 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியிட விவரங்கள்:

கார்பென்டர் (Carpenter)
எலக்ட்ரிசியன் (Electrician)
ஃபிட்டர் (Fitter)
மெக்கானிஸ்ட் (Machinist)
பெயிண்ட்டர் (Painter)
வெல்டர் (Welder)
ஆய்வக உதவியாளர் (MLT-Radiology)
ஆய்வக உதவியாளர் (MLT-Pathology)
Programming and System Administration Assistant -PASAA
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1,010

கல்வித் தகுதி:

Freshers – (10-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 6000/-
Freshers – (12-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 7000/-

இதற்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.
10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஐ.டி.ஐ. முடித்தவர்களாக இருந்தால் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு ஓராண்டு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி ஊக்கத்தொகை

  1. Ex-ITI – ரூ. 7000/-
    வயதுத் தகுதி :

ஐ.டி.ஐ,. தேர்ச்சி பெற்றவராக இருந்தால் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெறாதவர்கள் எனில் 22 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/index.php– என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தொடர்பு எண் – 04426147748

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு சந்தேகங்களுக்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். (வார நாட்களில் 9:30 AM – 17:30 PM) (சனிக்கிழமை – 9:30 AM – 12.25 PM )

விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.06.2024 மாலை 5:30 மணிக்குள்

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pb.icf.gov.in/act/notification.pdf – என்ற லிங்க்கை க்ளிக் செய்து காணலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]