10, 11, 12ம்
வகுப்புகளுக்கும் ஜன.31
வரை விடுமுறை திருப்புதல் தோ்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 31ம்
தேதி வரை 10, 11, 12ம்
வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை
அளிக்கப்படுவதாக தமிழக
அரசு அறிவித்தது.
ஏற்கெனவே
1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்
தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.19-ஆம்
தேதி முதல் பிளஸ்
2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெறவிருந்த முதல்
திருப்புதல் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்றுப்
பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றால் மாணவா்கள்
பாதிக்கப்படக் கூடாது
என்பதற்காக ஒன்று முதல்
9-ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவா்களுக்கு ஜன.31-ஆம்
தேதி வரை விடுமுறை
நீட்டிக்கப்பட்டது. வீட்டிலிருந்தபடியே இணையவழியில் கல்வி
கற்க அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேவேளையில், பொதுத் தோ்வை கருத்தில்
கொண்டு 10, 11, 12 ஆகிய
வகுப்புகளில் பயிலும்
மாணவா்கள் மட்டுமே நேரடி
வகுப்புகளில் கலந்து
கொள்ள வேண்டும் என
பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, கரோனா மூன்றாவது அலை
அதிகரித்துவரும் நிலையில்,
10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை
தவிர்த்து, இணையவழியில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக
அரசுக்கு சென்னை உயா்
நீதிமன்றம் கடந்த ஜன.12-ஆம்
தேதி அறிவுறுத்தியது.
அதன்
தொடா்ச்சியாக, இது
குறித்து ஆலோசனை நடத்திய
தமிழக அரசு 10, 11, 12 ஆம்
வகுப்புகளுக்கும் ஜன.31-ஆம்
தேதி வரை விடுமுறை
அளிக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து 10, 12 வகுப்புகளுக்கு ஜன.19-ஆம் தேதி
தொடங்கி நடைபெறவிருந்த திருப்புதல் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தோ்வு
குறித்த அறிவிப்பு பின்னா்
வெளியிடப்படும்.