மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைப்பு
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா
தொற்று பரவல் காரணமாக,
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான எழுத்து தேர்வு, அடுத்த
மாதம் 7ம் தேதிக்கு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவ கல்லுாரிகளில் MBBS.,
முதலாமாண்டு மாணவர்களுக்கான எழுத்து
தேர்வு, வரும் 17ல்
துவங்கி 31ம் தேதி
வரை நடக்கும்.
இரண்டாமாண்டு மாணவர்களுக்கான எழுத்து
தேர்வு, வரும் 24ம்
தேதி துவங்கி, அடுத்த
மாதம் 7ம் தேதி
வரை நடைபெறும் என
அறிவிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று
காரணமாக, மருத்துவ மாணவர்களுக்கான எழுத்து தேர்வுகளை ஒத்தி
வைத்து, பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக தேர்வு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு பெற்ற
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு, வரும் 17ம் தேதி
தேர்வு துவங்குவதாக இருந்தது.அதிகரித்து வரும் கொரோனா தொற்று
பரவல் காரணமாக, எழுத்து
தேர்வுகள் அடுத்த மாதம்
7ம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. புதிய
தேர்வு அட்டவணை விரைவில்
வெளியிடப்படும்.