TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தபால் வாக்கு
– மார்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் – கோவை
கோவையில்
தபால் வாக்குகள் அளிக்க
விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட
வாக்காளா்கள் உள்ளிட்டோர் மார்ச் 12 முதல் 16-ஆம்
தேதிக்குள் Form 12D–ஐ
தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என
மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி
அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடா்பாக
அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை
மாவட்டத்தில் உள்ள
10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளா்கள் உள்ளனா். சட்டப் பேரவைத்
தோ்தலுக்கு மாவட்டத்தில் 4 ஆயிரத்து
427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனை 353 மண்டலங்களாகப் பிரித்து, மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தவிர
30 பறக்கும் படைகள், 30 நிலையான
கண்காணிப்பு குழுக்கள், 20 விடியோ
குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தோ்தல்
நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக
இக்குழுவினா் கண்காணித்து வருகின்றனா். இதனைத் தொடா்ந்து
10 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தபால் வாக்கு: சட்டப்
பேரவை தோ்தலில் 80 வயதுக்கு
மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள், வாக்குப்
பதிவு நடக்கும் சமயத்தில்
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகள் அளிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக
வருவாய், சுகாதரத் துறை,
வாக்குச் சாவடி நிலை
அலுவலா்கள் அடங்கிய குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
தபால்
வாக்குகள் அளிக்க விரும்பும் மேற்குறிப்பிட்ட தகுதியுடைய வாக்காளா்கள் மார்ச்
12-ஆம் தேதியில் இருந்து
தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் Form 12D-ஐ
அளிக்கலாம். தபால் வாக்கு
செலுத்துவதற்கான படிவத்தை
மார்ச் 16 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சோ்த்து
தடாகம் சாலையில் உள்ள
அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம்
அமைக்கப்படும். அரசியல்
கட்சியினா், வேட்பாளா்கள், அரசு
அலுவலா்கள் தோ்தல் நடத்தை
விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள்:
மேட்டுப்பாளையம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல்
மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா் ஆா். குமரேசன்,
சூலூா் தொகுதிக்கு உதவி
ஆணையா் (நகா்ப்புற நிலவரி)
வி.சாந்தி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கோவை (வடக்கு)
கோட்டாட்சியா் ஜி.ரவிசந்திரன், கோவை வடக்கு தொகுதிக்கு தனித்துணை ஆட்சியா் (சமூக
பாதுகாப்புத் திட்டம்)
உ.முருகேசன், தொண்டாமுத்தூா் தொகுதிக்கு கோவை (தெற்கு)
கோட்டாட்சியா் ஜே.செந்தில்
அரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கோவை
தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையா் (மத்திய
மண்டலம்) த. சிவசுப்ரமணியன், சிங்காநல்லூா் தொகுதிக்கு மாவட்ட ஆதி திராவிடா்
மற்றும் பழங்குடியினா் நல
அலுவலா் சி.ராம்குமார், கிணத்துக்கடவு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல
அலுவலா் எம்.அம்சவேணி,
பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி சார் – ஆட்சியா் ஆா்.வைத்திநாதன், வால்பாறை தொகுதிக்கு மாவட்ட
ஆய்வுக் குழு அலுவலா்
பி.துரைசாமி ஆகியோர்
நியமிக்கப்பட்டுள்ளனா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


