தமிழக அரசு
அலுவலக ஆணைகள் கட்டாயம்
தமிழில் அனுப்ப வேண்டும்
– உயர்கல்வித்துறை உத்தரவு
அரசு
துறைகளில் உள்ள கோப்புகள்,
ஆவணங்கள், ஆணைகள், சுற்றறிக்கை, அறிவிப்புகள், கடிதங்கள்
போன்றவற்றில் அதிகமாக
ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள்
அதிகம் வருகிறது. இதனை
சரி செய்ய தமிழ்
வளர்ச்சி துறை சார்பில்
அரசு அலுவலகங்களில் கட்டாயம்
தமிழ் மொழியில் இருக்க
வேண்டும் என அரசாணை
அனுப்பப்பட்டது.
அதில்,
1956 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை படி தமிழகத்தில் ஆட்சி மொழி தமிழ்
மட்டுமே என்பதை மேற்கோள்
காட்டி இருந்தார். இந்த
அரசாணையை மேற்கோள்காட்டி கல்வி
நிறுவனங்கள் தமிழில் மட்டுமே
அரசாணை வெளியிட வேண்டும்
என உயர்கல்வி துறை
உத்தரவிட்டிருந்தது.
இது
குறித்து உயர்கல்வித்துறை துணை
செயலாளர் ஜெ. மோகன்
ராமன் கூறுகையில்:
தமிழகத்தின் ஆட்சி மொழி தமிழ்
என்பதால் தமிழகத்தில் உள்ள
உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப இயக்ககம், மற்றும் அதன்
கீழ் செயல்படும் இயக்ககம்
போன்றவற்றில் உள்ள
விதி விலக்குகள் வழங்கப்பட்டது தவிர மற்ற அனைத்து
ஆணைகளும் தமிழில் வழங்க
வேண்டும்.