அஞ்சல் துறையின்
கோடைக் கால முகாம்
– விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிப்பு
சிறப்பு
தபால்தலை சேகரிப்பு தொடா்பாக
கோடைக் கால முகாமில்
பங்கேற்பதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழி சிறப்பு
தபால் சேகரிப்பு தொடா்பான
முகாம் மே மாதத்தில்
நடைபெறவுள்ளது. கோடைக்
கால முகாமின் ஒரு
பகுதியாக, சிறப்பு தபால்
தலையை பொழுதுபோக்காக சேகரிப்பதை அறிமுகம் செய்தல், தபால்
தலை கண்காட்சிகளை தயாரித்தல், கடிதம் எழுதும் பயிற்சிகள், தபால் நிலையத்துக்கு களப்பயணம்
குறித்த ஒரு குறும்
படம் இடம்பெறுகிறது.
தகுதி: 8 முதல்
14 வயதுக்குட்பட்ட ஆா்வமுள்ள
குழந்தைகள் (March 31-ஆம்
தேதியின்படி) ஒரு நபருக்கு
ரூ.250 பதிவு கட்டணமாக
செலுத்தி, இந்த முகாமில்
சேரலாம். விண்ணப்பப் படிவம்
மற்றும் நுழைவுக் கட்டணம்
பெறுவதற்கான
கடைசி தேதி ஏப்ரல்
20-ஆம் தேதி என்று
நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல்
காரணமாக, இந்த முகாமில்
கலந்து கொள்வதற்காக, விண்ணப்பிக்க கடைசி தேதிநீட்டிக்கப்பட்டது. அதன்படி,
ஏப்ரல் 30-ஆம்தேதி கடைசிநாள்
ஆகும்.
தாமதமாக
வரும் நுழைவுகள் ஏற்றுக்
கொள்ளப்பட மாட்டாது. நுழைவுக்
கட்டணத்தை காசோலை அல்லது
டிமாண்ட் டிராப்ட் மூலம்,
தலைமை அஞ்சல அதிகாரி,
அண்ணாசாலை தலைமை அஞ்சலகம்
சென்னை 600002 என்ற பெயருக்கு
அனுப்ப வேண்டும். நுழைவுக்கட்டணத்தை விண்ணப்பத்துடன் (குழந்தையின் பெயா், பெற்றோர், அல்லது
பாதுகாவலரின் பெயா்,
செல்லிடப்பேசி பெண்,
வயது, முகவரி, மின்னஞ்சல் முகவா், பள்ளி முகவரி,
வகுப்பு, காசோலை, அல்லது
டிடியின் விவரங்கள்) விரைவு
தபால், பதிவுத் தபால்
மூலமாக மட்டுமே ‘தலைமை
அஞ்சலக அதிகாரி, அண்ணாசாலை,
தலைமை அஞ்சலகம், சென்னை
600 002’ என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.