Home Blog பாலிடெக்னிக் ஆசிரியர் பணி – டிசம்பர் 8ல் தேர்வு துவக்கம்

பாலிடெக்னிக் ஆசிரியர் பணி – டிசம்பர் 8ல் தேர்வு துவக்கம்

0

Polytechnic teaching job - Examination starts on December 8

பாலிடெக்னிக் ஆசிரியர்
பணி

டிசம்பர் 8ல் தேர்வு
துவக்கம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர்களை தேர்வு
செய்ய, ஆசிரியர் தேர்வு
வாரியம் சார்பில் நடத்தப்படும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வு எழுதும் மையம்
வெகு துாரத்தில் இருப்பதாக
புகார் தெரிவித்ததால் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது,
விண்ணப்பித்தவர்கள் தேர்வு
எழுத தயாராகி வருகின்றனர். இந்த தேர்வு முதலில்,
120
மையங்களில் நடத்தப்பட இருந்தது.

தற்போது,
200
மையங்களில் நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்கள், 100 கி.மீ.,க்குள்
தேர்வு எழுதும் வகையில்
மையங்கள் அமையும். எழுத்து
தேர்வு எழுத உள்ளவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்தந்த
மாவட்டத்திலேயே, தேர்வு
எழுத வசதி செய்யப்பட்டு உள்ளது.

நவம்பர்
20
முதல் 30ம் தேதி
வரை, நெட் தேர்வு
உட்பட, பல்வேறு தேர்வுகள்
நடக்க உள்ளன. இதில்,
அவர்களும் பங்கேற்பர் என்பதால்,
தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக,
டிச., 8 முதல் ஐந்து
நாட்கள் தேர்வு எழுத
ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

டிச.,
8
ல் தேர்வு துவங்கும்.
எனவே, தேர்வு நடக்குமா,
நடக்காதா என்று அச்சப்படத் தேவை இல்லை. மொத்தம்,
1,060
பாலிடெக்னிக் கல்லுாரி
விரிவுரையாளர்கள் பணியிடத்துக்கு, ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து,
140
பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
வன்னியர்களுக்கான, 10.5 சதவீதம்
இட ஒதுக்கீடு தொடர்பாக,
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

உச்ச
நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்.மேலும், 7.5 சதவீதம் இட
ஒதுக்கீட்டில், பொறியியல்
கல்லுாரிகளில் சேர்ந்த,
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை
அரசே ஏற்கும். இதற்கான
அரசாணை விரைவில் வெளியிடப்படும். கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என, தனியார்
கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version