தமிழகம் முழுவதும்
வரும் ஞாயிற்றுக் கிழமை
போலியோ சொட்டு மருந்து
முகாம்
வரும்
ஞாயிற்றுக் கிழமை அன்று
தமிழகம் முழுவதும் போலியோ
சொட்டு மருந்து முகாம்
நடைபெறும் என அரசு
தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
போலியோ
சொட்டு மருந்து முகாம்
பிப்ரவரி 27ம் தேதி
தமிழகம் முழுவதும் நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள அரசு
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள்,
பள்ளிகள் மற்றும் முக்கிய
இடங்கள் என மொத்தம்
43,051 மையங்களில் நடைபெறும். இம்மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப்,
உலக சுகாதார நிறுவனம்
மற்றும் பன்னாட்டு ரோட்டரி
சங்கங்கள் போலியோ முகாம்
பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.
முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
சொட்டு
மருந்து வழங்கும் மையங்கள்
காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை
செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து
குழந்தைகளுக்கும் பிப்ரவரி
27-ம் தேதி போலியோ
சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து
முகாம் பாதுகாப்பான முறையில்
நடைபெற தகுந்த கொரோனா
நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். சமூக
இடைவெளியினைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும்
கை கழுவுதல் கட்டாயமாகும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு
கை கழுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல்
/ இருமல் அல்லது மற்ற
தொற்று கரோனா தொடர்பாக
இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.
மையங்களில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க
வேண்டும். சொட்டு மருந்து
கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு
நபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
தேசிய
தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு
நாள்களுக்கு முன் போலியோ
சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில்
மீண்டும் சொட்டு மருந்து
வழங்கப்பட வேண்டும். அண்மையில்
பிறந்த குழந்தைகளுக்கும் முகாம்
அன்று சொட்டு மருந்து
கொடுப்பது அவசியமாகும். விடுபடும்
குழந்தைகளைக் கண்டறிய,
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது
கை சுண்டு விரலில்
மை வைக்கப்படும். முகாம்
நாளன்று போலியோ சொட்டு
மருந்து வழங்க தனியார்
மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. புலம்
பெயர்ந்து வாழும் பெற்றோரின் குழந்தைகளுக்கும் முகாம்
நாளன்று போலியோ சொட்டு
மருந்து வழங்கப்படும்.
போலியோ
சொட்டு மருந்து வழங்கும்
பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட
அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு
மருந்து முகாம் நாளில்
பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக
முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்
சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் கொரோனா
நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்றி சொட்டு மருந்து
வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர்கள் இந்த
அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து
வழங்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

