போலீஸ் உடல் தகுதி பயிற்சி வகுப்பு பிப்ரவரி 8 முதல்
போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், உடற்தகுதி பயிற்சி வகுப்பு, வரும், பிப்., 8ல் துவங்குகிறது என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்டமாக நடக்கும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல்திறன் சோதனை தேர்வில் வெற்றி பெற, உரிய வகையில், உடற்தகுதி பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கலெக்டர் அலுவலக விளையாட்டு திடலில், உடற்தகுதி பயிற்சி வகுப்புகள், வரும், பிப்., 8ல் துவங்கப்படுகிறது.தினமும் காலை, 6:30 முதல், 9:00 வரையும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரையும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடந்த எழுத்து மற்றும் உடற்தகுதி இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2022 – 23ல், போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், 5 பேர், போலீஸ் தேர்வில், 17 பேர் பணி ஆணை பெற்று, தற்போது பணியில் உள்ளனர்.
மேலும், 2023-24ல், போலீஸ் எஸ்.ஐ., எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று, 12 பேர் நேர்காணலுக்கு சென்றுள்ளனர். தற்போது, போலீஸ் எழுத்து தேர்வில், 13 பேர் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286-222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow