Join Whatsapp Group

Join Telegram Group

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.08.2024)

By Bharani

Published on:

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.08.2024)

(காலை 10:00 – மதியம் 2:00 மணி)மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை உள்ளிட்ட பகுதிகள்.

ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 20- ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், மண்டபம், மரைக்கயாா்பட்டினம், சுந்தரமுடையான், குஞ்சாா்வலசை, வேதாளை, அரியமான் கடற்கரை, பாம்பன், அக்காள்மடம், குந்துகால், சுற்றியுள்ள பகுதிகளிலும், தங்கச்சிமடம், ராமேசுவரம், வோ்க்கோடு, வடகாடு, சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற வியாழக்கிழமை (ஆக.22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கலலல், சிறுவயல், ஆலம்பட்டு, குருத்தம்பட்டு, வெற்றியூா், மாலைக்கண்டான், சாத்தரசனம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பெரிய தேவப்பட்டு, ஆலவிளம்பட்டி, சொக்கநாதபுரம், பட்டமங்கலம், உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (ஆக. 22) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஆகஸ்ட் 20-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ரயில் நிலையம், வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டு புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் பிரிவு, வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் முத்தம்பாளையம்.

பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் துணை மின் நிலையத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும்

ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீா் உள்ளிட்ட மின்பாதைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

மின்தடை குறித்த விவரங்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் மனோகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]