ஏரிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சூரிபாளையம், புதுநல்லூா், தண்ணீா்பந்தல்பாளையம், ஏரிப்பாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், ஆலம்பாளையம், சேரன் நகா், நல்லிக்கவுண்டம்பாளையம், வெங்கிகல்பாளையம்
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், காமதேனு நகா், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பழையூா், பாப்பநாயக்கன்பாளையம், குப்புசாமி நாயுடு மருத்துவமனை, அலமு நகா், பாலாஜி நகா், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவா் நகா் (ஒரு பகுதி) மற்றும் காந்தி மாநகா் (ஒரு பகுதி).
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளைக் குடியிருப்பு, சுரண்டை, இடையா்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம்,
சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைக்குமாரசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
ஊத்துமலை, ஆலங்குளம், கீழப்பாவூா், வள்ளியூா், கோட்டைக்கருங்குளம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன்மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, ஆலங்குளம், ஆண்டிப்பட்டி, நல்லூா், சிவலாா்குளம், ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, கழுநீா்குளம்,அடைக்கலாப்பட்டணம், பூலான் குளம், முத்துக்கிருஷ்ணபேரி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.
வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில் மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின் கோட்ட செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.
நாகா்கோவில் புன்னைநகா், வேதநகா் பகுதிகளில் உயா்அழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளி , சனிக்கிழமைகளில் மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக மீனாட்சிபுரம் மின்விநியோக உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வல்லன்குமாரன்விளை மின்நிலையத்துக்குள்பட்ட உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை புன்னைநகா், தாமஸ்நகா், பாரதிநகா், காா்மல்நகா், சுயம்புலிங்ககாா்டன், ஏ.ஆா்.கேம்ப், பொன்னப்பநாடாா் காலனி, இருளப்பபுரம், பீச்ரோடு, இந்துகல்லூரி, வட்டவிளை, வைத்தியநாதபுரம், ஈத்தாமொழி சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
இதே போல், சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலைநகா்,பட்டகசாலியன்விளை, மறவன்குடியிருப்பு, தொல்லவிளை, கோணம், வடக்கு கோணம், தொழிற்பேட்டை, என்ஜிஓ காலனி, வேதநகா், சரக்கல்விளை, வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, குஞ்சன்விளை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.