Thursday, April 17, 2025
HomeNewslatest newsதமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (18.11.2024)
- Advertisment -

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (18.11.2024)

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (18.11.2024)
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (18.11.2024)

பட்டணம்: பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பட்டணம் புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா் (ஒரு பகுதி), பட்டணம், நாயக்கன்பாளையம்.

வால்பாறை அய்யா்பாடி: வால்பாறை அய்யா்பாடி எஸ்டேட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் தேவானந்த் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா்பால்ஸ் , குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி எஸ்டேட்.

மதுரை: (காலை 9:00 – மாலை 5:00 மணி) மதுரை பைபாஸ் ரோடு முனியாண்டி கோயில், ஜெய்நகர், விந்தியாசல் அப்பார்ட்மென்ட், சுரேந்திரன் நகர், மீனாட்சி நகர், தானத்தவம், மீனாட்சி நகர், அனீஸ் கான்வென்ட், ஜீவனா பள்ளி, ராஜம் நகர், ராகவேந்திரா நகர், ஜே.பி., நகர்.நவ.19ல் மின்தடை(காலை 9:00 – மாலை 5:00 மணி) வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சிவா ரைஸ்மில், சித்தி விநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர்.

வஞ்சிபாளையம்: நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நவம்பா் 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பெரியாயிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூா், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகா், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகா், பெ.அய்யம்பாளையம் (ஒரு பகுதி) மற்றும் கணக்கம்பாளையம் சிட்கோ.

வஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: வெங்கமேடு, சாமந்தன்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15.வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வலையபாளையம், அனந்தபுரம், செம்மாண்டம்பாளையம்புதூா், முருகம்பாளையம், சோளிபாளையம் மற்றும் ராக்கியாபாளையம்.

கல்லக்குடி: பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.19) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பராமரிப்புப் பணிகளால் கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணணூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா்.

அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், வி.சி. புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ. மேட்டூா், நத்தம், திருமாங்குடி, டி. கல்விக்குடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

இச்சிப்பட்டி: இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் சி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோயில், கோம்பக்காடு, தேவராயன்பாளையம், சின்னகோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதியில் (சூா்யா நகா், ராம் நகா்), கோம்பக்காட்டுபுதூா், கள்ளப்பாளையம், கொத்துமுட்டிபாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம் பிரிவு, செந்தேவிபாளையம், குமாரபாளையம், கருகம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம்.

அச்சன்புதூா்: அச்சன்புதூா் துணை மின்நிலைய பகுதியில் திங்கள்கிழமை (நவ. 19) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப.திருமலைகுமாரசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அச்சன்புதூா் துணை மின் நிலையத்தில் நவ.19ஆம்தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல்2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!