Pink WhatsApp – காவல்
துணை ஆணையர் எச்சரிக்கை
தமிழகம்
முழுவதும் Pink WhatsApp என்று
பரவி வரும் லிங்குகளை
பதிவிறக்கம் செய்வது மூலமாக
செல்போன்களை ஹேக் செய்யலாம்
என காவல் துணை
ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழகம்
முழுவதும் WhatsApp செயலி
மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி
அதிக பிரபலமாக இருப்பதற்கு காரணம் அது அனைத்து
மக்களும் எளிதில் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. மேலும்
தகவல் பரிமாற்றத்திற்கு எளிய
முறையில் உள்ளது. இந்நிலையில் Pink WhatsApp என்ற லிங்க்
அனைத்து மக்களின் தொலைபேசி
எண்ணுக்கும் பரவி வருகிறது.
Pink WhatsApp என்று
கூறி வரும் லிங்குகளை
தொட வேண்டாம் என்று
தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள். google Play
store
மூலமாக பதிவிறக்கம் செய்யும்
செயலிகளை மட்டுமே மக்கள்
பயன்படுத்த வேண்டும். ஏனெனில்
இந்த லிங்களை நமது
செல்போனில் பதிவிறக்கம் செய்வதால்
நமது போனில் உள்ள
தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக காவல் துணை ஆணையர்
தெரிவித்துள்ளார்.
தற்போது
Pink வாட்ஸ் ஆப் என்ற
லிங்க் பரவி வருகிறது.
அது WhatsApp செயலியின்
புதிய update என
சொல்லி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த லிங்கை
ஓபன் செய்து இன்ஸ்டால்
செய்த சிலரது மொபைல்
போன் வைரஸால் தாக்கப்பட
வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள்
உஷாராக இருக்க வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


