Google Pay வழங்கும்
தனிநபர் கடன்
நீங்களும்
கூகுள் பே பயன்படுத்துபவரா? இந்த செய்தி உங்களுக்கானது. கூகுள் பே தனது
வாடிக்கையாளர்களுக்காக ஒரு
சிறப்பு திட்டத்தை கொண்டு
வந்துள்ளது.
இதன்
மூலம் ஒரு லட்சம்
ரூபாய் உங்கள் கணக்கில்
நேரடியாக வந்து சேரும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
டிஎம்ஐ
ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்
(DMI Finance Private Limited (DMI)) கூகுள் பேயில்
தனிநபர் கடன் திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்களிடம்
நல்ல கிரெடிட் வரலாறு
இருந்தால், சில நிமிடங்களில் ரூ.1 லட்சம் தனிநபர்
கடனைப் பெறுவீர்கள். அதாவது,
இப்போது கூகுள் பேயில்
ரூபாய் பரிவர்த்தனை மற்றும்
பில்களை செலுத்துதல் ஆகியவற்றுடன், தனிநபர் கடன் வசதியும்
கிடைக்கும்.
இருப்பினும், இந்த கடன் அனைத்து
Google Pay வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. இந்த வசதி நல்ல
கடன் தகுதி (Credit Score) உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
டிஎம்ஐ
ஃபைனான்ஸ் முதலில் தகுதிபெற்ற தகுதியுள்ள பயனர்களைத் தீர்மானித்து அவர்களுக்கு
Google
Pay மூலம் கடன் வழங்கும்.
இந்த
பயனர்களின் செயலிகளில் இது
குறித்த தகவல்கள் அனுப்பப்படும். இதற்குப் பிறகு, கடன்
தேவை என்று ஒப்புக்
கொண்டால், கடன்தொகையானது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் உடனடியாகப் போடப்படும்.
கூகுள்
பே–யின் இந்தத்
திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள,
பயனர்கள் சரியான CIBIL மதிப்பெண்ணைப் பெற்றிருப்பது அவசியம்.
இந்த
தனிநபர்
கடன் வசதி 15,000க்கும்
மேற்பட்ட பின் குறியீடுகளுடன் தொடங்கப்படுகிறது. இந்த
சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 36 மாதங்கள்
வரை ரூ.1 லட்சம்
வரை கடன் பெறலாம்.
கூகுள் பே–யில் தனிநபர் கடனை எப்படி வாங்குவது ????
Google Pay செயல்யைத்
திறக்கவும். முன்–அங்கீகரிக்கப்பட்ட கடனுக்கு நீங்கள்
தகுதி பெற்றிருந்தால், பணம்
என்ற தெரிவு உங்கள்
செயலியில் இருக்கும்.
அங்கே
கடன்கள் என்பதைக் கிளிக்
செய்யவும். அதன் பிறகு
Offers என்ற ஆப்ஷன் திறக்கும்.
இதில், DMI என்ற ஆப்ஷன்
தோன்றும்.
இந்த
சலுகையின் கீழ் நீங்கள்
பெறும் தொகையின் விவரங்களை
இங்கே பார்க்கலாம். இதற்குப்
பிறகு, விண்ணப்ப செயல்முறை
முடிக்கப்பட வேண்டும். கடன்
ஒப்புதல் கிடைத்ததும், அந்தத்
தொகை உங்கள் வங்கிக்
கணக்கில் வரவு வைக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

