ஆன்லைன் மூலம்
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி
நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியத்
தேர்தல் ஆணையம், ஒவ்வொரு
ஓட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, ‘எனது ஓட்டு,
என் எதிர்காலம் ஒரு
ஓட்டின் வலிமை‘ என்ற
கருப்பொருளை மையமாகக் கொண்டு,
ஆன்லைன் மூலம், தேசிய
வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை
துவங்கி உள்ளது. இப்போட்டிகளில், அனைத்து வயது பொதுமக்களை பங்கேற்க செய்வதன் மூலம்,
மக்களாட்சியின் முக்கியத்துவத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக, இந்திய
தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மக்களாட்சியில், ‘ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது‘ என்ற கருப்பொருளை மையமாகக்
கொண்டு பொதுமக்களிடம் இருந்து,
ஏராளமான படைப்புகளை வரவேற்கிறோம். மையக்கருத்து: ‘எனது
ஓட்டு எனது எதிர்காலம் ஒரு ஓட்டின் வலிமை‘
தேசிய அளவிலான போட்டிகளில், வினாடி – வினா போட்டி,
வாசகம் எழுதும் போட்டி,
பாட்டுப் போட்டி, காணொலி
காட்சி உருவாக்கும் போட்டி
மற்றும் போஸ்டர் வடிவமைப்புப் போட்டி என, ஐந்து
பிரிவுகள் உள்ளன. போட்டிகளில் பங்கேற்பவர்கள், போட்டிகளின் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest// என்ற
வலைதளத்தில் பார்வையிடலாம்.
போட்டிகளில் பங்கேற்பவர்கள், போட்டிகள்
தொடர்பான பதிவுகள் மற்றும்
அதனுடைய விபரங்களை, voter-contest@eci.gov.in என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப
வேண்டும். பங்கேற்பாளர்கள் தாங்கள்
கலந்துகொள்ள இருக்கும் போட்டியின் பெயர், மற்றும் பிரிவு
ஆகியவற்றை மின்னஞ்சலில் பொருள்
பகுதியில் தெளிவாகக் குறிப்பிட
வேண்டும். போட்டி தொடர்பான
அனைத்து பதிவுகளும், பங்கேற்பாளர்களின் விபரங்களுடன் இணைத்து,
வரும் மார்ச், 15க்குள்,
voter-contest@eci.gov.in என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப
வேண்டும். இப்போட்டிகளில், நாமக்கல்
மாவட்டத்தில் உள்ள
பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழில் பயிற்சி
நிலையங்களில் படிக்கும்
மாணவ, மாணவியர், அனைத்து
வயது பொதுமக்கள், தொழில்
முனைவோர் அதிகளவில் பங்கேற்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

