பான் காா்டு-ஆதாா் எண் இணைப்புக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதாா் காா்டு இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஏனெனில், ஒருவா் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் காா்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓா் ஆதாா் அட்டை மட்டுமே பெற முடியும். எனவே, பான் காா்டு – ஆதாா் எண் இணைப்பு மூலம் போலி பான் காா்டுகள் முடக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் போலியான பான் காா்டுகள் ஒழிக்கப்பட்டன. பான்-ஆதாா் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மாா்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%82.1,000%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..jpg)