Tuesday, August 26, 2025
HomeBlogகிராம உதவியாளர் பணியிடத்தில் 4% மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவு

கிராம உதவியாளர் பணியிடத்தில் 4% மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவு

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக
செய்திகள்

கிராம உதவியாளர் பணியிடத்தில்
4%
மாற்றுத்திறனாளிகளுக்கு
வழங்க
உத்தரவு

கிராம உதவியாளர் பணியிடங்களில்
4%
மாற்றுத்
திறனாளிகளுக்கு
வழங்க
வேண்டும்
என்று
தமிழக
அரசு
உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை
நிரப்புவது
தொடர்பாக
வட்டாட்சியர்
அளவில்
விளம்பரம்
செய்து
உரிய
அரசு
விதிமுறைகளைப்
பின்பற்றி
காலிப்பணியிடங்களை
நிரப்பிடுமாறு
வருவாய்
நிர்வாக
ஆணையரால்
அனைத்து
கலெக்டர்களுக்கும்
கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்டங்களில்
உள்ள
கிராம
உதவியாளர்
காலிப்பணியிடங்களை
நிரப்புவது
தொடர்பாக
வட்டாட்சியர்
அளவில்
அறிவிப்பு
வெளியிடப்பட்டு
வருகிறது.

வெளியிடப்பட்டுள்ள
அறிவிப்புகளில்
காலிப்பணியிடங்களுக்கான
விண்ணப்பத்தில்
மாற்றுத்
திறன்
குறித்த
விவரங்கள்
தெரிவிக்கப்படவில்லை
என
மாற்றத்
திறனாளிகள்
நல
ஆணையத்தை
அனுகி
புகார்
தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஆராய்ந்தபோது
ஒரு
சில
மாவட்டங்களில்
வட்டாட்சியர்களால்
வெளியிடப்பட்டுள்ள
அறிவிப்புகளில்
மாற்றுத்
திறனாளிகளின்
வசதிக்கேற்ப
அறிவிப்பு
வெளியிடப்படவில்லை.

இந்தப் பதவிக்கு மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு
இன
சுழற்சிமுறை
பின்பற்றப்படுகிறது
என
அறிய
முடிகிறது.

இவ்வறிவிப்பில்
மாற்றுத்
திறனாளிகள்
இட
ஒதுக்கீட்டில்
கிராம
உதவியாளர்
பணியிடங்களுக்கு
அரசிடம்
இருந்து
விலக்களித்து
ஆணை
பெறப்படாத
நிலையில்
மாற்றுத்
திறனாளிகள்
உரிமை
சட்டம்
2016
பிரிவு
34
ன்
படி
அரசுப்
பணிகளில்
4%
இட
ஒதுக்கீடு
உறுதிப்படுத்தப்பட
வேண்டும்.

எனவே அரசாணையில் தெரிவித்துள்ள
மாற்றுத்
திறன்
தன்மைகளின்
அடிப்படையில்
கிராம
உதவியாளர்
பணியிடங்களில்
மாற்றுத்
திறனாளிகளை
பணியமர்த்திட
ஆவண
செய்ய
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular