TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தனி கல்விக்
கொள்கை குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம்
இதுகுறித்து மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழகத்திற்கான தனித்துவமான மாநில கல்விக்
கொள்கை உருவாக்கிட உரிய
நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும்
ஆலோசனைகள் பெறுவதற்கு உயர்மட்ட
குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்
அடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார்
கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி
கருத்துக்கள் மற்றும்
ஆலோசனைகளை செப்டம்பர் 15ம்
தேதிக்குள் stateeducationpolicy@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கும், center for
excellence building, 3வது தளம், களஞ்சியம்
கட்டடம் பின்புறம் அண்ணா
பல்கலைக்கழகம் சென்னை
600025 என்ற முகவரிக்கு அனுப்பி
வைக்கலாம்.
மேலும்
திருநெல்வேலி, மதுரை,
திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், வேலூர், சென்னை
ஆகிய எட்டு இடங்களில்
மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


