HomeBlogஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் – 17 மாநிலங்களில் அமல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் – 17 மாநிலங்களில் அமல்

 

ஒரே நாடு,
ஒரே ரேஷன் திட்டம்
– 17
மாநிலங்களில் அமல்

கொரோனா
நோய்த்தொற்று 2020-ஆம்
ஆண்டு அனைத்து மாநிலங்களையும் பொருளாதார வீழ்ச்சி அடைய
செய்துள்ளது. இதன் காரணமாக
மாநில அரசுகள் மத்திய
அரசின் நிதி உதவியை
கேட்டனர். அப்போது மத்திய
அரசு, ஒரே நாடு
ஒரே குடும்ப அட்டை
திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
என நிபந்தனை விதித்தது.

இந்த
திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக
உள் மாநில மொத்த
உற்பத்தி மதிப்பில் 0.25% சதவிகிதத்தை கடனாக பெற்றுக் கொள்ளலாம்
என மத்திய அரசு
தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த
நிபந்தனையை ஏற்று 17 அரசுகள்
இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது
குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி,
இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநில அரசுகளுக்கு கூடுதலாக ரூ.37,600 கோடி
கடன் பெறுவதற்கு செலவின
தொகை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலமாக
நாடு முழுவதும் உள்ள
ஏழைகள், புலம் பெயர்
தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் போன்றவர்கள் பயன்பெறுவார்கள்.

அவர்கள்
நாட்டின் எந்த பகுதியில்
சென்றாலும் குடும்ப அட்டைகளை
பயன்படுத்தி அரசு வழங்கும்
பெருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
வளர்ந்து வரும் தகவல்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சீர்திருத்தத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular