முன்னாள் படை
வீரர்களும், ஓய்வு பெற்ற
சீருடை பணியாளர்களும் சிறப்பு
பாதுகாப்பு அலுவலராக தேர்தலில்
பணிபுரிய அழைப்பு
ஏப்ரல்
6-ம் தேதி அன்று
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்
நடக்க உள்ளது. பொதுவாக
தேர்தலின் போது தேர்தல்
பணிகளில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். நடப்பு ஆண்டுக்கான தேர்தல் பணியாளர்களின் பட்டியலை
அரசு சேகரித்து தயார்
நிலையில் வைத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் பாதுகாப்பு பணியில்
முன்னாள் படை வீரர்களை
ஈடுபடுத்த உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அறிவித்துள்ளார். மேலும்,
விருப்பமுள்ள முன்னாள்
படைவீரர்கள் தங்களின் விருப்பத்தை தங்களது அடையாள அட்டையுடன் கிருஷ்ணகிரி முன்னாள் படை
வீரர் நலன் உதவி
இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ
அல்லது அலுவலக தொலைபேசி
எண் 04342 – 236134 ல்
தெரிவிக்கலாம்.
இதே போல் தருமபுரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் அவர்களும்,
தேர்தல் பணியில் தருமபுரி
மாவட்டத்தைச் சேர்ந்த
முன்னாள் படை வீரர்களை
காவல் துறையினருடன் இணைந்து
பாதுகாப்பு பணியில் ஈடுபட
அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல்
பாதுகாப்பு பணியில் ஈடுபட
விருப்பமுள்ள முன்னாள்
படை வீரர்களும், ஓய்வு
பெற்ற சீருடை பணியாளர்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட
காவல் நிலையங்களில் விருப்ப
மனுக்களை அளிக்கலாம்.