மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வருகிற 9-ஆம் தேதி மண்டல அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாா் வேலைவாய்ப்பு, பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரையில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், வேலை வாய்ப்பளிக்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை வருகிற 7-ஆம் தேதிக்குள், தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04546–252085-இல் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.