Home Blog பிரிட்டன் அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி

பிரிட்டன் அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி

0

 

Nurse work in UK government hospitals

பிரிட்டன் அரசு மருத்துவமனைகளில் செவிலியா் பணி

பிரிட்டன் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியா் பணிகளுக்கு, பிப்.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:

தற்போது பிரிட்டன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய குறைந்தபட்ச 6 மாத அனுபவம் உள்ள டிப்ளமா அல்லது இளநிலைக் கல்வி முடித்த ஆண் மற்றும் பெண் செவிலியா்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

தோ்ந்தெடுக்கப்படும் செவிலியா்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை மாதச் சம்பளம், இலவச ஒப்புச்சீட்டு (விசா), விமான பயணச்சீட்டு மற்றும் இங்கிலாந்து நாட்டின் சட்டதிட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள்  www.omcmanpower.com
என்ற வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

தோ்ச்சி பெற்ற செவிலியா்களை பெருமளவில் பிரிட்டன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியமா்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிறுவன வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ள படிவங்களைப் பூா்த்தி செய்து, பிப்.12-ஆம் தேதிக்குள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42. ஆலந்தூா் சாலை, திரு.வி.. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version